;
Athirady Tamil News

அஹ்மதாபாத் விமான விபத்து தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

அஹ்மதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், கடந்த ஜூன் 12 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 29 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 270 உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மரபணு பரிசோதனைமூலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது.

கடந்த 23ஆம் திகதி வரை 259 உடல்கள் மரபணு பரிசோதனை மேற்கொண்டு, உறவினர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒருவருடைய உடல் மட்டும் உறவினர்களின் மரபணு பரிசோதனையுடன் ஒத்துப்போகாமல் இருந்தது.

இந்தநிலையில் இன்று அந்த உடலும் மரபணு பரிசோதனைமூலம் அடையாளம் காணப்பட்டதாக அஹ்மதாபாத் பொது மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே முன்னதாக 270 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மொத்த உயிரிழப்பு 260 ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.