எரிமலை வெடிப்புக்கு முன்னாள் காதலை வெளிப்படுத்திய காதலன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஹவாயில் உள்ள கிலாவேயா எரிமலை வெடித்துச் சிதறிய கண்கவர் தருணத்தைப் பின்னணியாகக் கொண்டு, மார்க் ஸ்டீவர்ட் தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவிற்குத் தனது காதலைத் தெரிவித்தார்.
அழகிய காதல் தருணத்தில் இன்ப அதிர்ச்சியில் திளைத்த ஒலிவியாவும் அவரது காதலை ஏற்றுக்கொண்டார்!
இந்த தனித்துவமான தருணத்தின் மூச்சடைக்கக்கூடிய புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. அந்தப் படங்களில், தீக்குழம்பு காற்றில் பறந்து ஒரு தீப்பிழம்பு காட்சியை உருவாக்குகிறது.
மார்க் தனது காதலி ஒலிவியாவின் முன் மண்டியிட்டு, மோதிரத்தை நீட்டி காதலை வெளிப்படுத்துகிறார்.
இயற்கையின் தீவிரமான சக்திக்கு மத்தியில் நிகழ்ந்த இந்த நம்பமுடியாத காதல் காட்சி, பல இணைய பயனர்களைக் கவர்ந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் ஒரு நொடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.