;
Athirady Tamil News

ஏழு கண்டங்களில் 7 உயரமான மலைகளில் ஏறிய இலங்கையர்!

0

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 7 உயரமான மலைகளில் ஏறிய, இலங்கையரான ஜோஹன் பீரிஸ், வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள கடைசி மலையான மவுண்ட் டினாலியை ஏறிய பிறகு, செவ்வாய்க்கிழமை (08) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் 2014 இல் ஏறத் தொடங்கிய ஜோஹன் பீரிஸ், வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஏறி முடித்துள்ளார்.

சிகை அலங்கார நிபுணர்
ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ, ஆசியாவில் எவரெஸ்ட், ஐரோப்பாவில் ரஷ்யாவில் எல்பிரஸ், தென் அமெரிக்காவில் அகோன்காகுவா, அண்டார்டிகாவில் வின்சென்ட்,

ஆஸ்திரேலியாவில் கோசியுஸ்கோ மற்றும் வட அமெரிக்காவில் டெனாலி ஆகியவற்றில் ஏறி, அந்த மலைகளின் சிகரங்களில் இலங்கை கொடியை நட்டு, அந்த மலைகளின் சிகரங்களில் இலங்கை கொடியை நட்டு நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு வந்துள்ளார்.

கடைசி மலை சிகரத்தையும் ஏறிய ஜோஹன் பீரிஸ், தோஹாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் Q.R.- 658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை செவ்வாய்க்கிழமை (08) அன்று அதிகாலை 03.07 மணிக்கு வந்தடைந்தார்.

ஜோஹன் பீரிஸ் ஒரு சிகை அலங்கார நிபுணர் ஆவார், அவர் கொழும்பு மற்றும் பல நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களிலும், லண்டன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் சிகை அலங்கார நிலையங்களை நடத்தி வருகிறார்.

இந்த மலைகளில் ஏறிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தை எதிர்காலத்தில் தொகுத்து, உலக மலையேறுபவர்களுக்கான சுற்றுலா தலமாக இலங்கையை ஊக்குவிக்க நம்புவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜோஹன் பீரிஸ் கூறினார்.

அதேவேளை , ஜோஹன் பீரிஸ் இப்போது உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளிலும் ஏறி வெற்றி பெற்ற இலங்கையர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.