கழுத்தில் பெரிய செயின் அணிந்து ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவில், கழுத்தில் பெரிய செயின் அணிந்து ஸ்கேன் அறைக்குள் நுழைந்த ஒருவர் ஸ்கேன் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் கழுத்தில் பெரிய செயின் அணிந்து ஸ்கேன் அறைக்குள் நுழைந்த ஒருவர் ஸ்கேன் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த அவரை காப்பாற்ற அவசர உதவியை அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
MRI ஸ்கேன் இயந்திரங்களில் வலிமையான காந்தங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆக, ஸ்கேன் இயந்திரம் இயக்கத்தில் இல்லாவிட்டால் கூட காந்தப்புலம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும்.
அப்படியிருக்கும் நிலையில், நோயாளி ஒருவருக்கு ஸ்கேன் எடுத்துக்கொண்டிருக்கும்போது இந்த நபர் ஸ்கேன் அறைக்குள் நுழைந்ததால், அவர் அணிந்திருந்த சங்கிலியை ஸ்கேன் இயந்திரம் இழுக்க, அவர் ஸ்கேன் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பொதுவாக யாரும் எளிதாக ஸ்கேன் அறைக்குள் நுழைய முடியாது.
அப்படியிருக்கும்போது, இந்த நபர் எப்படி அறைக்குள் நுழைந்தார், இவருக்கே படுகாயம் என்றால், ஸ்கேன் எடுத்துக்கொண்டிருந்த நோயாளியின் நிலை என்ன என பல கேள்விகள் எழுந்துள்ளன.
நியூயார்க்கிலுள்ள Nassau Open MRI என்னும் ஸ்கேன் நிலையத்தில் புதன்கிழமையன்று இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.