;
Athirady Tamil News

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு துறவற விழா மானிப்பாயில் கோலாகலம்!

0

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து மானிப்பாயில் விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகா சமாதி தினமான இன்று சனிக்கிழமை (19.07.2025) நடத்தின.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து கலை, கலாசார பேரணியாக நிகழ்வு நடைபெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.