;
Athirady Tamil News

சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம்

0

சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் மக்கள் நேற்று முன்தினம் மதியம் தங்கள் வீடுகள் அதிர்வதை உணர்ந்தார்கள்.

சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம்
ஆம், சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில், நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானதாக சுவிஸ் நில அதிர்வு ஆய்வமைப்பான Swiss Seismological Service – SED தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என The Blick பத்திரிகை தெரிவித்துள்ள நிலையில், தாங்கள் கடலில் கப்பலில் போவது போல உணர்ந்ததாக அம்மாகாண மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

சிலர், தங்கள் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

உண்மையில், சுவிஸ் நில அதிர்வு ஆய்வமைப்பான SED, சுவிட்சர்லாந்து மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான முறை நில அதிர்வு ஏற்படுவதாகவும், ஆனால், பொதுவாக அவை ரிக்டர் அளவுகோலில் 2.5 அல்லது அதற்குக் குறைவாகவே பதிவாவதாகவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.