;
Athirady Tamil News

சைபர் தாக்குதல், தேர்தல் தலையீடு., ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டு

0

ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது.

2024 ஆகஸ்ட் மாதத்தில் ஜேர்மன் வான்வழி பாதுகாப்பு அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தலையிட்டதாகவும் ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த தாக்குதலை APT28 (Fancy Bear) எனப்படும் ஹேக்கர் குழுவுடன் நேரடியாக இணைக்க முடிகிறது. இது ரஷ்ய இராணுவ உளவுத்துறையான GRU-வுடன் தொடர்புடையது” எனக் கூறியுள்ளார்.

இந்த குழுவிற்கு, முன்பு World Anti-Doping Agency தரவு கசிவு மற்றும் 2016 அமெரிக்க ஜனநாயகக் கட்சி மீதான சைபர் தாக்குதல் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பதாக மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், “Storm 1516” எனப்படும் பிரச்சாரத்தின் மூலம் ரஷ்யா தேர்தலை பாதிக்க முயன்றது என ஜேர்மனி குற்றம்சாட்டியுள்ளது.

இதில் Greens கட்சியின் Robert Habeck மற்றும் தற்போதைய ஜேர்மன் சேன்சலர் Friedrich Merz (CDU) ஆகிய முக்கிய வேட்பாளர்கள் குறிவைக்கப்பட்டனர்.

தேர்தல் நாளுக்கு முன், போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வாக்குச்சீட்டு மோசடி நடந்தது போல காட்டப்பட்டது. இது தவறான தகவல் பிரச்சாரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனி, ரஷ்ய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து புதிய தனிப்பட்ட தடைகள் விதிக்கத் திட்டமிட்டுள்ளது. “ரஷ்யா தனது ‘Hybrid’ நடவடிக்கைகளுக்கான விலையைச் செலுத்த வேண்டும்” என ஜேர்மன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மறுபுறம், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், முன்பு இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.