;
Athirady Tamil News

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

0

ரஷியாவின் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்கரை காம்சட்காவில் வியாழக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 அலகுகளாக பதிவானது.

ரஷியாவில், செவெரோ-குரில்ஸ்க் மீன்பிடி துறைமுகத்தின் சில பகுதிகளில் 6 மீட்டர் உயர அலைகள் ஏற்பட்ட நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் வடக்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய கம்சட்காவின் கிளைச்செவ்ஸ்கயா சோப்கா எரிமலையிலிருந்து எரிமலைக்குழம்பு ஓட்டத்தையும் தூண்டியது. தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக, ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பம் அருகே, பசிபிக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 20.7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 8.8 அலகுகளாகப் பதிவானது. இது 2011 டோஹோகு நிலநடுக்கத்திற்குப் பிறகு உலகளவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பசிபிக் கடல் முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. ரஷியாவின் காம்சட்கா மற்றும் குரில் தீவுகளில் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனா்.

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கானவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியில், மவுயியின் கஹுலுயி மற்றும் ஹலேயிவாவில் 4 அடி உயர அலைகள் பதிவாகின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.