கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா நேற்று(08) இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோலாகலமாக வீதி உலா வந்தது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பார்வையிட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
ஜனாதிபதியுடன் இணைந்து புத்தசாசன, மத மற்றும் மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த,
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



