;
Athirady Tamil News

‘அம்மா உதவி செய்’: குறுஞ்செய்தி அனுப்பிய 18 வயது அமெரிக்க இளைஞர்..சடலமாக மீட்பு

0

அமெரிக்காவில் காணாமல்போன 18 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாயமான இளைஞர்
வட கரோலினாவைச் சேர்ந்த பிரிட்ஜெட் என்ற பெண்ணின் 18 வயது மகன் Giovanni Pelletier. இவர் கடந்த ஆகத்து 1ஆம் திகதி, தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் ஃபுளோரிடாவுக்கு சென்றபோது மாயமானார்.

எங்கில்வுட்டில் உள்ள தனது தந்தைவழி தாத்தா வீட்டிற்கு Giovanni செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் அழைத்துச் செல்லப்பட்ட 30 நிமிடங்களுக்குள் தனது தாய் பிரிட்ஜெட்டிற்கு “அம்மா உதவி செய்” என்று குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

இது அவரது பதற்றத்தை ஏற்படுத்தவே மகனை தேட ஆரம்பித்துள்ளார். அப்போது Giovanniயின் செல்போன் மற்றும் பேக் ஆகியவை நெடுஞ்சாலை ஓரத்தில் கிடைத்ததால் குடும்பத்தினர் மனமுடைந்தனர்.

மேலும் அவர் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் கிடைத்த நிலையில் பொலிஸார் தீவிர தேடலில் இறங்கினர்.

அனுப்பிய குறுஞ்செய்தி
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, Giovanniயின் உடல் அழுகிய நிலையில் ஃபுளோரிடா காவல் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

மனட்டீ ஷெரிப் அலுவலகத்தின்படி, வெள்ளிக்கிழமை Giovanniயின் அழுகிய எச்சங்கள் I-75 மற்றும் ஸ்டேட் ரோடு 70யில் உள்ள ஒரு தடுப்புக் குளத்தில் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் சனிக்கிழமை பிற்பகலில் உடல் முறையாக அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து ஞாயிற்றுகிழமை பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் Giovanni தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய பின் பதில் கிடைக்காதபோது, தனது அத்தை மற்றும் தந்தைக்கு உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.