;
Athirady Tamil News

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

0

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மற்றொரு குழுவுடன் மொரகல்ல கடற்கரையில் நீராடிய போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியட்நாம் பெண்ணின் உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.