வரலாற்று பிரசித்திபெற்ற முன்னேஸ்வர ஆலய கொடியேற்றம்
வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகாசமேத ஶ்ரீ முன்னை நாதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு இன்று (11) கோலாகலமாக இடம்பெற்றது.
பிரதான குருவும், தர்மகர்த்தாவுமாகிய ஆலய குருக்கள் பிரம்மஶ்ரீ ச.பத்மநாப குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
கொடி கம்பத்துக்குரிய சீலை யானையில் சுமக்கப்பட்டு உள் வீதி, வெளி வீதி வந்து பின்னர் கொடியேற்றம்இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னேஸ்வர ஆலய கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.

