;
Athirady Tamil News

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலி

0

ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியதாகவும் இதனால் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் மாட்ரிட்டின் வடக்கில் உள்ள புறநகர்ப் பகுதியான ட்ரெஸ் கான்டோஸில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்று தீ வேகமாகப் பரவ வித்திட்டதோடு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நபர் உயிரிழக்கவும் நேர்ந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்ரியட்டின் பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் இசபெல் டயஸ் ஆயுசோ தமது எக்ஸ் தளத்தில், இக்காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கான ட்ரெஸ் கான்டோஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

’40 நிமிடங்களில் 06 கிலோ மீற்றர்களுக்கு தீ விரைவாகப் பரவியதாக மட்ரியட்டின் பிராந்திய சுற்றுச்சூழல் தலைவர் கார்லோஸ் நோவில்லோ கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.