லொஹானின் மறைவு கண்டிக்கு இழப்பு; மஹிந்த ராஜபக்ஷ
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார்.
அவரது மறைவு தேசத்திற்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும் என ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் லொஹான் ரத்வத்தவின் மறைவுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.