சந்தான கோபாலர் உற்சவம்
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது.காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.




