நல்லூர் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதி மன்றம்
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் பகுதியில் நேற்று இரவு, பொதுமகன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஐந்து சந்தேக நபர்கள் கைது
சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில், குறித்த சந்தேக நபர்கள் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.