சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள்
சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை யாழ். தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் த. வினோஜித் ஏற்றி வைத்ததை அடுத்து, பிரகாஷின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் த. சித்தார்த்தன் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் உள்ளிட்டோரும் மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து, யாழ் ஊடகவியலாளர்களின் மருத்துவ தேவைகளுக்காக குடும்பத்தினரால் ஒரு லட்ச ரூபாய் பணம் ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் , செயலாளர் சி. நிதர்சன் மற்றும் மூத்த நிர்வாக உறுப்பினர் த. வினோஜித் ஆகியோரிடம் கையளித்தனர்.
சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி தனது 26ஆவது வயதில் உயிரிழந்தார்.







