மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் சந்திப்பு
நிந்தவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.அஸ்பர் ஜே.பி தலைமையில் வியாழக்கிழமை(11) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டுக்காக மாட்டிறைச்சிக் கடை குத்தகைக்கு விடுதல் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மாட்டிறைச்சியினது விலைக்
குறைப்பு என இரு விடயங்கள் சம்பந்தமாகவும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இதனை மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் மறுதலிப்புச் செய்ததோடு எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் இந்த கலந்துரையாடல் கலந்துரையாடல் நிறைவுற்றது.
இந்நிகழ்வில் சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.இர்பான், சபையின் உறுப்பினர்களான எம்.எம்.அன்ஸார், எம்.சம்சுன் அலி, ஐ.எல்.ஜாபிர் மற்றும் சபையின் செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.பீ.எம்.றசீட் என பலரும் கலந்து கொண்டனர்.



