குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது
அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், மனைவி மற்றும் மகன் கண் முன்னே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் தலையைத் துண்டித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவக உரிமையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரமௌலி நாகமல்லையா (50), கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாலை ஒன்றில், சந்திரமௌலியின் தலை உருண்டு ஓடுவதும், அதனை ஒருவர் ஓடிச் சென்று எடுத்துச் செல்வதும் விடியோவில் பதிவாகியிருக்கிறது. கொலையாளியான யார்ட்னஸ் கோபோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவகத்தில், செப்டம்பர் 10ஆம் தேதி உணவக உரிமையாளர் சந்திரமௌலிக்கும் கொலையாளி யோர்டனிஸ் கோபோஸ்-மார்டினெடஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, திடீரென இந்த சம்பவம் நடந்துள்ளது. வன்முறை ஏற்பட்டபோது, சந்திரமௌலியின் மகனும் மனைவியும் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கண் முன்னே, கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கொலையாள 37 வயதான யோர்டானிஸ் கோபோஸ் என்றும், அவரும் அந்த உணவத்தில் பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இவர் மீது ஆட்டோ திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், உணவகத்தில் பணியாற்றியபோது பழக்க வழக்கங்களில் இருந்த பிரச்னைகளால் ராஜமௌலி திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த கோபோஸ், தலையை வெட்டிக் கொன்றுவிட்டு, அந்த தலையை இரண்டு முறை எட்டி உதைத்து, அது சாலையில் உருண்டு ஓடும்போது அதனைத் தூக்கிச் சென்று குப்பைத் தொட்டியில் வீசியதும் விடியோவில் பதிவாகியிருக்கிறது.
அவசர அழைப்பு வந்ததன்பேரில், சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, குற்றவாளியை பிடித்து வைத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குற்றவாளியை கொலையை ஒப்புக் கொண்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.