;
Athirady Tamil News

சார்லி கிர்க் கொலையாளி தப்பியது எப்படி? புதிய விடியோ வெளியானது!

0

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது.

உடா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்களையும் கொலைக்குப் பயன்படுத்திய மிக நவீன துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். கட்டடத்தின் மேல்கூரையிலிருந்த, குற்றவாளி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான தடயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு கை மற்றும் ஷூவின் தடங்களும் கிடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உடா மக்கள் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறுகையில், உடா மாகாண பல்கலைக்கழகத்தின் மாடி வழியாக ஓடி வந்த கொலையாளி, அங்கிருந்து வெளியே குதித்து ஓடும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கொடி மற்றும் கழுகின் புகைப்படங்கள் அடங்கிய ஆடையை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் இன்னும் தெரியவரவில்லை என்றும், அடர்ந்த மரங்கள் இருந்த பகுதி வழியாகத் தப்பிச் சென்றதகாவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.