வீடுகளை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் ; 25 பேர் உயிரிழப்பு
காஸா பகுதியில் உள்ள ரஃபா நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் கூடாரங்களை இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஒக்டோபர் 2023 முதல் காஸாவில் 64,800 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.