;
Athirady Tamil News

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமான படை – 30 பேர் உயிரிழப்பு; என்ன காரணம்?

0

பாகிஸ்தான் விமான படை குண்டு வீசியதில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் விமான படை குண்டுவீச்சு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள திரா பள்ளத்தாக்கில், பாகிஸ்தான் விமான படை இன்று அதிகாலை 2 மணிக்கு குண்டு வீசியுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட J-17 போர் விமானங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 8 LS-6 குண்டுகளை லேசர் உதவியுடன் துல்லியமாக வீசியுள்ளது.

இந்த தாக்குதலில், பெண்கள் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

நேபாளத்தை தொடர்ந்து இரு வேறு நாடுகளில் ஊழலுக்கு எதிராக வெடித்த போராட்டம்
நேபாளத்தை தொடர்ந்து இரு வேறு நாடுகளில் ஊழலுக்கு எதிராக வெடித்த போராட்டம்
இந்த தாக்குதலுக்கு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

என்ன காரணம்?
இங்கு ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளதாகவும், அதனை குறி வைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதில், பதுங்கியுள்ள 2 பயங்கரவாத தளபதிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாகவும், குண்டுகளை மசூதிகளை சேமித்து வைப்பதாகவும் காவல்துறை அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.