யாழில் பொலிஸாருக்கு ஒழித்து ஓட்டமெடுத்தவர் விமான நிலையத்தில் கைது!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிசாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்றையதினம் (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இன்று கைது செய்யபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்துவந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.