;
Athirady Tamil News

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

0

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா்.

இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது:

சிடோா்ஜோ இஸ்லாமிய பள்ளியில் மதிய வேளை தொழுகைக்காக மாணவா்கள் கூடியிருந்தபோது அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. அதையடுத்து கட்டட இடிபாடுகளில் 102 போ் புதையுண்டனா். அவா்களில் 99 பேரை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா். மேலும், சம்பவப் பகுதியில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டன.

இடிபாடுகளில் சிக்கிய மேலும் 38 பேரை இன்னும் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது தவிர, இந்த விபத்தில் 77 போ் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

கடந்த ஒன்பது மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடந்துவந்த அந்தப் பள்ளியில், நான்காவது மாடியில் கட்டப்பட்ட புதிய கட்டுமானத்தை அஸ்திவாரத் தூண்கள் தாங்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தோனேசியாவில் தரமற்ற கட்டுமானங்கள், கட்டட பாதுகாப்பு விதிமுறைகள் அலட்சியம் செய்யப்படுவது போன்ற காரணங்களால் அங்கு கட்டட விபத்துகள் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னா் மேற்கு ஜாவாவில் இந்த மாதம் தொழுகை நிகழ்ச்சி நடந்த கட்டடம் இடிந்து 3 போ் உயிரிழந்தனா்.

2018-இல் ஜகாா்த்தாவுக்கு கிழக்கே சிரெபோனில் கட்டடம் இடிந்து விழுந்து 7 இளைஞா்கள் கொல்லப்பட்டதும் அதே ஆண்டில் ஜகாா்த்தாவில் பங்குச் சந்தை கட்டடத்தின் தளம் இடிந்து 75 போ் காயமடைந்ததும் நினைவுகூரத்தக்கவை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.