தடை செய்யப்பட்ட வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கைளில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை சேர்ந்த 857 வலைகளை மீட்டுள்ளனர்.
குறித்த வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைதும் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்தொழில் சார் உபகரணங்கள் மற்றும் வலைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் , பொலிஸ் அதிரடி படையினருடன் இணைந்து கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன் போது தடை செய்யப்பட்ட வலைகளை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் 857 வலைகளை கடற்படையினர் மீட்டிருந்தனர். அதனை அடுத்து அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கொட்டடி மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட வலைகளையும் , கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.