;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் இடிந்துவிழும் அதிர்ச்சிக் காட்சிகள்

0

நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டை நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் ஒன்று இடிந்துவிழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்
நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.50 மணியளவில், மத்திய பிலிப்பைன்சை ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.

நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பில் சுமார் 69 பேர் உயிரிழந்ததுடன், 150க்கும் மேலானோர் காயமடைந்துள்ளார்கள்.

இந்த நிலநடுக்கத்தின்போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க Shrine of Santa Rosa de Lima என்னும் தேவாலயம் இடிந்துவிழும் காட்சிகளை ஒருவர் படம் பிடித்துள்ளார்.

அந்தக் காட்சிகளும், தேவாலயம் இடிந்து கிடக்கும் காட்சிகளும் சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகியுள்ளன.

தேவாலயம் இடிந்து விழுவதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் சத்தமிட்டுள்ளனர். என்றாலும், அதிர்ஷ்டவசமாக தேவாலயம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.