;
Athirady Tamil News

ரணிலுக்கு தயிர் , தேன் பரிசாக வழங்கிய மஹிந்த ராஜபக்க்ஷ

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் தங்கல்லவில் உள்ள மஹிந்தவின் கார்ல்டன் இல்லத்திற்கு அவரது நலம் விசாரிக்க சென்றபோது, இந்தப் தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகள் அவருக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

கொழும்புக்கு கொண்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகள்
நவம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவது அவசியம் என ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து நாமல் மற்றும் சாகர காரியவசத்திடம் தெரிவித்து தேவையான உதவிகளை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

மதிய உணவுக்குப் பிறகு, ரணிலுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கினார். ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் மஹிந்த கொடுத்த தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை கவனமாக கொழும்புக்கு கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.