ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இவரைக் கைது செய்துள்ளது.