;
Athirady Tamil News

மரணமடைந்த பெண் ஊழியரிடம் விடுப்புக் கடிதம் கேட்ட நிறுவனம்: கொந்தளிக்க வைத்துள்ள செயல்

0

தைவான் விமான நிறுவனம் ஒன்று, மரணமடைந்த தன் பெண் ஊழியர் ஒருவரிடம் விடுப்பு எடுத்ததற்கான ஆதாரம் கோரியுள்ள விடயம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

மரணமடைந்த பெண் ஊழியர்
Ms Sun (34) என்னும் இளம்பெண், தைவானின் EVA Airways விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார்.

சென்ற மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி Milanஇலிருந்து Taoyuan செல்லும் விமானத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது Sunக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Sun, இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 8ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.

விடுப்பு கடிதம் கேட்ட நிறுவனம்
விடயம் என்னவென்றால், தன் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததற்கு இரங்கல் கூட தெரிவிக்காத EVA Airways விமான நிறுவனம், அதற்கு பதிலாக, Sun மருத்துவமனையில் இருந்த நாட்களுக்கு விடுப்புக் கடிதம் கொடுத்தாரா என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

மகளை இழந்த சோகத்தில் இருந்த Sunஇன் குடும்பத்தினர், விமான நிறுவனத்தின் கோரிக்கையால் வேதனை அடைந்தாலும், பதிலுக்கு அவரது இறப்புச் சான்றிதழை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த செய்தி இணையவாசிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கொந்தளிக்க வைத்துள்ள செயல்
தொழிலாளர் யூனியன்கள் அந்த விமான நிறுவனத்தில் கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பொதுமக்களும், பணியாளர்களை ஒரு நிறுவனம் இப்படியா நடத்துவது என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதற்கிடையில், Sun உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்கள் கொந்தளிப்பைத் தொடர்ந்து EVA Airways விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.