யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன் இன்றைய தினம் (21.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி நாளைய தினம் (22.10.2025) வடக்கு மாகாண சபையில் தமது கடமையினை பொறுப்பேற்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

