;
Athirady Tamil News

முகமூடி அணிந்தவர்களைக் கண்டு பொலிசாரை அழைத்த மக்கள்: ஜேர்மனியில் பெரும் குழப்பம்

0

ஜேர்மன் நகரமொன்றில் நிகழ்ந்த திடீர்க் குழப்பத்தின் விளைவாக பொலிசார் ராணுவ வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர்.

பொலிசாரை அழைத்த மக்கள்

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள மியூனிக் நகரில், முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று பதுங்குவதைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசாரை நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட, பொலிசார் திருப்பிச் சுட்டதில் ஒருவர் காயமடைந்தார்.

ஜேர்மனியில் பெரும் குழப்பம்
விடயம் என்னவென்றால், பொதுமக்கள் முகமூடிக்கொள்ளையர்கள் என நினைத்தவர்கள் உண்மையில் ராணுவ வீரர்கள்.

அதாவது, Marshal Power 2025 என்று பெயரிடப்பட்ட, 500 ராணுவ வீரர்கள், 300 பொலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பங்கேற்ற பெரிய அளவிலான ஒரு ராணுவப் பயிற்சிக்கு ராணுவம் திட்டமிட்டிருந்திருக்கிறது.

ஆனால், அந்த ஆபரேஷன் குறித்து பொதுமக்களுக்கோ உள்ளூர் பொலிசாருக்கோ எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

ஆக, முகமூடி அணிந்த ராணுவ வீரர்களை பொதுமக்கள் கொள்ளையர்கள் என நினைத்து உள்ளூர் பொலிசாரை அழைத்துள்ளனர்.

அவர்களைக் கண்ட முகமூடி அணிந்த ராணுவ வீரர்கள், இதுவும் ஆபரேஷனின் ஒரு பாகம் என நினைத்து அவர்களை நோக்கி வெற்று குண்டுகளால் சுட்டுள்ளனர்.

தங்களை நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட்டதால் பொலிசார் உண்மையாகவே அவர்களை நோக்கிச் சுட, ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

ஆகமொத்தத்தில் ராணுவ வீரர்களுக்கும் பொலிசாருக்கும் மோதல் ஏற்பட, மக்கள் அதிர்ச்சியடைய, அந்த பகுதியில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.