தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு – ரெயில் சேவை பாதிப்பு
திஸ்பூர்,
அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவில் திடீரென தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், அசாம் மற்றும் வடக்கு வங்காளம் செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள் பலமணி நேரம் போராடி தண்டவாளத்தை சரிசெய்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறும்போது, இந்த குண்டு வெடிப்பால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும், இந்த சதி செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.