பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் முனைவோர் ஒரு பெறுமதிக்கவர்களாக பார்க்கப்பட்டுவருவதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு
வட மாகாணத்தின் சிறந்த தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் வட மாகாணத்தின் தொழில்முனைவோா் விருதுகள் தொடர்பான
கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தலைமையில், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன் (30.10.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது,
வட மாகாண தொழில் முனைவோர் விருதுகள் வழங்குவது தொடர்பாக ஊக்குப்படுத்துவது மற்றும் அதனை விண்ணப்பிப்பது அதன் விளக்கங்களை வழங்குவதற்காகவும் வடமாகாண தொழில் முனைவோரை அழைத்து இருப்பதாகவும், இவ்விருது தேசிய மாகாண ரீதியில் வழங்கப்படுகின்ற உயரிய விருதாக காணப்படுவதால் தகுதியான பலர் மாவட்டத்தில் இருந்தும் அதற்கு விண்ணப்பிக்காத நிலையே மாவட்டத்தில் காணப்படுவதாகவும், பிரதேச செயலங்களின் விடயம் சார்ந்த உத்தியோகத்தர்களும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விருது ஒன்று கிடைக்கப்பட்டால் போது அவ்விருதிற்கு நாங்கள் அடிப்படை தகுதியானவர்கள் என்றும் அதற்கு சிறப்பான தேர்ச்சி நிலை அடைந்துள்ளோம் என்பதை அவ் விருது வெளிக்காட்டி நிற்பதாகவும், விருது முனைவோரால் சிறப்படைய கூடிய நிலையும் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு அரிய சந்தர்ப்பமாக காணப்படுவதாகவும்
நமது மாவட்டத்தை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்ற தொழில் முனைவோர் ஒரு பெறுமதிக்க அம்சமாக பார்க்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், தொழில் முனைவோர் பாராட்டப்பட வேண்டியவர்களாகவும், பட்டதாரிகளாக இருந்தால் அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை மாற வேண்டும் எனவும் இளம் தொழில் முயற்சியாளர்கள் தனியாா் துறையில் பல பரிமாணங்களில் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தொழில் முனைவோர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் போது விருது கிடைத்தாலும் கிடைக்காவிடினும் அத்தொழிலை மேம்படுத்திக்கொண்டு வெற்றிகளை அடையலாம் எனவும் அரசாங்க அதிபர் கூறினார்.
இந் நிகழ்வில் தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கு. வசீகரன் அவர்களால் வடமாகண தொழில் முனைவோர் விருதுகள் பற்றிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கூறப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.


