எகிப்து-சுவிட்சர்லாந்து புதிய கூட்டுறவு திட்டத்தில் கையெழுத்து
எகிப்தும் சுவிட்சர்லாந்தும் 2025–2028 காலப்பகுதிக்கான புதிய கூட்டுறவு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மதிப்பு 60 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (சுமார் 67 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.
முக்கியமாக, இந்த ஒத்துழைப்பு திட்டம் புலம்பெயர்வு, பசுமை பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட உள்ளது.
இந்த நிகழ்வு எகிப்தின் புதிய நிர்வாக தலைநகரில் உள்ள திட்டமிடல் அமைச்சகத்தில் நடைபெற்றது.
இதில் திட்டமிடல் அமைச்சர் ரானியா அல்-மஷாத் (Patricia Danzi) மற்றும் சுவிட்சர்லாந்தின் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமை இயக்குநர் பெட்ரிசியா டான்சி (Rania Al-Mashat) ஆகியோர் பங்கேற்றனர்.
இது 2012 முதல் இரு நாடுகளுக்கிடையே நடைமுறையில் உள்ள நான்காவது கூட்டுறவு திட்டமாகும். இரு நாடுகளுக்கிடையே 45 ஆண்டுகளுக்கும் மேலான உறவுகளை இது மேலும் வலுப்படுத்துகிறது.
“இந்த புதிய திட்டம் மற்றும் பொருளாதார குழு வாயிலாக, இரு நாடுகளுக்கிடையே முதலீடுகள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.” என அல்-மஷாத் கூறியுள்ளார்.
மேலும், எகிப்து சமீபத்தில் மேற்கொண்ட பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து தூதுவர் ஆண்ட்ரியாஸ் பவும் மற்றும் SDC இயக்குநர் டான்சி ஆகியோர், இந்த ஒத்துழைப்பு திட்டம் மனிதாபிமான உதவி, புலப்பெயர்வு, ஜனநாயகம், தனியார் துறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என தெரிவித்தனர்.
மேலும், இரு நாடுகளும் தெற்குத் தெற்குப் பாக ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.