தலைமை பொலிஸ் அத்தியட்சகர் – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண தலைமை பொலிஸ் அத்தியட்சகர் R.M பாலித செனவிரத்ன யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (03.11.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் யாழ் நகர் பாதுகாப்பு மற்றும் வீதி போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், சட்டவிரோதமான மண் கடத்தல், திருட்டு மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்க அதிபருக்குத் தெரியப்படுத்தியதுடன், 11 இடங்களில் போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ்சார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள் எனவும், இதில் யாழ் நகரப்பகுதியில் வேம்படிச் சந்தி, ஶ்ரீ நாக விகாரைச் சந்தி, மின்சார நிலைய வீதிச் சந்தி மற்றும் காங்கேசன்துறை வீதிச் சந்தி என்பவற்றில் நிரந்தர கண்காணிப்பில் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள் என்றும் தலைமை பொலிஸ் அத்தியட்சகரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கான 24 மணித்தியாலம் “அவசர பொலிஸ் பிரிவு” நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், 0212222221 இலக்க புதிய அவசர தொலைபேசிக்கு இலக்கத்திற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தலைமை பொலிஸ் அத்தியட்சகரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது .
