;
Athirady Tamil News

திருகோணமலை கண் பரிசோதனை கூடத்தில் தீ விபத்து

0

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள தனியார் கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸார் விசாரணை
குறித்த கண் பரிசோதனை நிலையத்தின் மேல் மாடி பகுதியில் தங்கியிருந்த தாதியர்களின் விடுதி அறையும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.