;
Athirady Tamil News

வழிபாட்டுத் தலங்களை குறிவைத்த 2 பயங்கரவாதிகள்: மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி

0

சவுதி அரேபியாவில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதியில் இருவருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றத்திற்காக இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஃபஹத் பின் அலி பின் அப்துல்அஜிஸ் அல்-வாஷில்(Fahd bin Ali bin Abdulaziz Al-Washil) மற்றும் அப்துல்ரஹ்மான் பின் இப்ராஹிம் பின் முகமது அல்-மன்ஸூ(Abdulrahman bin Ibrahim bin Mohammed Al-Mansou) இருவரும் நாட்டில் பல்வேறு பயங்கரவாத குற்றங்களில் நிரூபிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், சவுதி ராஜ்ஜியத்திற்கு எதிராகவும், பாதுகாப்புக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளிடம் இணைந்ததற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நாட்டின் வழிபாட்டு தலங்கள், பாதுகாப்பு தலைமையகங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது கண்டறியப்பட்ட பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.