;
Athirady Tamil News

கிரிக்கெட் போட்டியின் போது விபரீதம்; பறிபோன உயிர்

0

மினுவாங்கொட, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஒருவர் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்து மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 41 வயதுடைய, பளுகஹவெல, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.