;
Athirady Tamil News

சாவகச்சேரியில் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 300 போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞனை போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.