காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; 13 வயது சிறுமியின் சினிமாவை மிஞ்சிய சம்பவம்
பதுளையில் தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 13 வயது மாணவி என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த தாய், பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் என பொலிஸார் கூறியுள்ளனர்.