அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, போர்ப்பதற்றத்துக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆதரவை நாடினார். இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானை எச்சரிக்கும் வகையில் பகிரங்க மிரட்டல் பதிவு ஒன்றை பகிர்ந்தார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் “ஈரானால் இணைந்து செயல்படமுடியவில்லை.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எப்படி என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். அணு திட்டம் தொடர்பான தீர்வு விரைவில் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளும்” என்றிருந்தார்.இதோடு அவர் துப்பாக்கியுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும், இனி மென்மையான அணுகுமுறை இல்லை என்ற வாசகத்தையும் பகிர்ந்தார். இந்த பதிவு, வாஷிங்டன் முன் வைத்துள்ள வைத்துள்ள நிபந்தனைகளுக்கு ஈரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தால், அமெரிக்கா இன்னும் கடுமையான கொள்கையை பின்பற்றும் என சுட்டிக்காட்டுகிறது.
முன்னதாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் உலகளாவிய பாது காப்பை உறுதி செய்ய போதுமானவை அல்ல என்று டிரம்ப் அடிக்கடி விமர்சித்துள்ள நிலையில், அவற்றை மாற்றும் வகையில் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில், சவுதி அரேபியாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில், ஈரான் மேற்கொண்ட தாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஹார் முஸ் நீரிணை மூடல் அச்சுறுத்தல்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியநாடுகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பிராந்தியத்தில்பாதுகாப்பும், சுதந்திரமான கடல் போக்குவரத்தும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த ராணுவ கூட்டமைப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவு கணை முன் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
பிரபல அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, ஈரா னின் பொருளாதாரத்தையும் எண்ணெய் ஏற்றுமதியையும் பாதிக்கும் வகையில், அதன் துறைமுகங்களுக்கு செல்லும் கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முற்றுகை திட்டத்தை காலவரையின்றி நீடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். இதன் மூலம், ஈரானை பொருளாதார ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்தும் நீண்டகால திட்டத்தை அமெ ரிக்கா பின்பற்றத் தயாராக உள்ளது.