;
Athirady Tamil News

மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் சென்ற டொல்பின்கள்

0

கடந்த தினங்களில் மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது தைம்ழகத்தின் இராமநாதபுரத்திற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இராமநாதபுரம் , தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன.

மக்கள் ஆச்சரியம்
டொல்பின்கள் அங்குமிங்கும் நீந்தி செல்லும் அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு ஆகும்.

ஆனால் , இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை பிரதேச மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.