செட்டிகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற தெய்வீக கிராம நிகழ்வு
நேற்றைய தினம் செட்டிகுளம், முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் தெய்வீக கிராம நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் வெங்கலச்செட்டிகுள பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான ஆன்மீக ஊர்வலமானது கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஆலய முன்றலில் முடிவடைந்திருந்தது.
குறித்த ஊர்வலத்தை தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நந்தி கொடியேற்றப்பட்டதுடன், பல்வேறு சமய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பிரதேச அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
வெங்கல செட்டிகுள் பிரதேச செயலாளர் கே.சுலோஜனி அவர்களின் வழிகாட்டலில் உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ம.தவமலர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழருவி த.சிவகுமாரன், இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், கலாசார உத்தியோகத்தர் ப.கிருசாந், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சற்சுருவேணு, ஆலய பரிபாலன சபையினர், அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.








