வெள்ளத்தில் சிக்கிய 450 பிக்குகள் மீட்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக அனுராதபுரத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 450 பிக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை நிக்கவரெட்டிய பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பிக்கு ஒருவர் உட்பட் 4பேர் விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
விமானப் படை மீட்பு குழுவினரின் பெல் 212 உலங்கு வானூர்தி மூலம் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.