;
Athirady Tamil News

மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் ; மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

0

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹாவலி கங்கையின் ஆற்றுப்படுகையில் தாங்க முடியாத அளவுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதாலும், அந்த பகுதியில் பெய்த மழையினாலும், அணைக்கட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒரே அணைக்கட்டு போல காட்சியளிக்கின்றன.

இந்த அணைக்கட்டும் உடையும் என எதிர்பார்க்கவில்லை என்றாலும், உடைவதற்கான ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

குறித்த பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், அணைக்கட்டை நெருங்க முடியாதுள்ள நிலையில், மாவிலாறு அணைக்கட்டின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இது இரவு நேரம் என்பதால், முடிந்தளவு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலை வேளையில் கடற்படை அல்லது பிற பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியுடன் நிலைமையை ஆய்வு செய்து தெளிவான தகவலை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.