நேபாளத்தில் நிலநடுக்கம்..!
காத்மாண்டு: நேபாளத்தில் ஞயிற்றுக்கிழமை(நவ. 30) நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவானது. எனினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
பகல் 12.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி பஜ்ஹாங் மாவட்டத்தில் சாய்பால் மலையருகே மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் அரய்ச்சி மையமான என்.இ.எம்.ஆர்.சி. தெரிவித்துள்ளது.