கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்
;
எனவே அவர்களுடைய தொழில் நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு நுணாவிலில் அமைந்துள்ள எமது ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக அவர்களுடைய தொழில் நடவடிக்கைக்கு தேவையான எரிபொருட்களை கொள்கலனில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனவே உரிய தொழில்களில் ஈடுபடுபவர்கள் கிராம அலுவலருடைய உறுதிப்படுத்தல் கடிதத்தோடு எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும். தென்மராட்சி பிரதேச விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மாத்திரமின்றி ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் உரிய ஆதாரத்தோடு எரிபொருள் கொள்வனவில் ஈடுபடலாம் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.