;
Athirady Tamil News

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக அவசர உதவிப் பிரிவு

0

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.

இந்த அவசர உதவி பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.

தொலைபேசி எண்கள்
தொலைபேசி எண்கள்: +94 117 445641 / +94 112 207250

வட்ஸ்அப் (WhatsApp) எண்: +94 077 7189552 (செய்திகள் மட்டும்)

மின்னஞ்சல்: [email protected]

தூதரக விவகாரப் பிரிவு: +94 742 595546

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்: +94 719 802822

அவசர அழைப்பு எண் (Hotline): 1989

இலங்கையர்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளும் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.