நாயாறு பால புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
நாட்டில் டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் முற்றிலுமாக சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு பாலம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று (02) தெரிவித்தது.
பாலம் இடிந்து விழுந்ததன் விளைவாக, முல்லைத்தீவிலிருந்து வெலி ஓயாவிற்கும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கும் மற்றும் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்கும் பயணிக்கும் அனைத்துப் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.