யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டித்வா புயலால் பேரழிவுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் , பலவேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவிகள் கிடைத்து வருகின்றது.
அந்தவகையில் அமெரிக்காவும் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

